நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கடல் வழி சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைந்த மூன்று மலேசியர்கள் கைது செய்யப்பட்டனர் 

சிங்கப்பூர்: 

சிங்கப்பூரின் கடல் எல்லையைத் தாண்டி சட்டவிரோதமாக நுழைந்த மூன்று மலேசியர்களைக்  கடலோரக் காவல்படை கைதுசெய்துள்ளது.

நேற்று பிற்பகல் 2.05 மணிக்கு அடையாளம் தெரியாத படகு ஒன்றை கடலோரக் காவல்படை அதிகாரிகள் கண்டதாகச் சிங்கப்பூர்க் காவல்துறை தெரிவித்தது.

சிங்கப்பூரின் வடமேற்கு கரையோரம் உள்ள புலாவ் சரிம்பான் (Pulau Sarimbun) தீவு அருகே அதிகாரிகள் சோதனை நடத்திக்கொண்டிருந்தனர்.

கடலில் இருந்த படகை நோக்கி அதிகாரிகள் சென்றபோது அது மலேசியாவை நோக்கி வேகமாகச் சென்றது.

அதிகாரிகள் படகைப் பின் தொடர்ந்தனர்.
அதிகாரிகள் விரட்டியபோது படகில் இருந்த இருவர் நீரில்  விழுந்து படகில் மீண்டும் ஏறி அமர்ந்தனர்.

படகு இருமுறை கடலோரக் காவல்படைப்படகின் மீது மோதியது.கடலோரக் காவல்படை அதிகாரி ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.

கைதுசெய்யப்பட்ட மூவரும் 28 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.படகு பறிமுதல் செய்யப்பட்டது. காவல்துறை விசாரணை தொடர்கிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset