நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெளியூரில் உள்ள வாக்காளர்கள் மீண்டும் வாக்களிப்பதற்காக  ஆயிர் கூனிங் திரும்ப உறுதியளித்துள்ளனர்: டத்தோஸ்ரீ சரவணன்

தாப்பா:

வெளியூரில் உள்ள வாக்காளர்கள் மீண்டும் வாக்களிப்பதற்காக ஆயிர் கூனிங் திரும்ப உறுதியளித்துள்ளனர்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை வலியுறுத்தினார்.

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆகையால் வெளியூரில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற திரும்பி வர வேண்டும்.

அதே வேளையில் அந்த வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்களை வாக்களிக்க கொண்டு வருவதற்கான முயற்சிகளை தேசிய முன்னணி தேர்தல் கேந்திரம் மேற்கொள்ள வேண்டும்.

தேசிய முன்னணி வேட்பாளரை ஆதரிக்கும் குழுக்களிடமிருந்து அதிகபட்ச வருகையை உறுதி செய்வதற்கான ஆரம்ப உத்தியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாங்கள் வெள்ளை வாக்காளர்களை அடையாளம் கண்டுள்ளோம்.

அவர்களில் பெரும்பாலோர் வாக்களிக்க வரத் தயாராக இருப்பதாக எங்களிடம் உறுதியளித்துள்ளனர்.

நோன்பு பெருநாளுக்கு பின் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினாலும், தங்கள் ஜனநாயக உரிமைகளை நிறைவேற்ற மீண்டும் அவர்கள் ஆயிர் கூனிங் திரும்ப விரும்புகிறார்கள்.

தாப்பாவில் நடைபெற்ற டத்தோஸ்ரீ சரவணன் கிண்ண கால்பந்து போட்டியை தொடக்கி வைத்த அவர்  செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.

ஆயிர் கூனிங் சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய முன்னணி வேட்பாளர் டாக்டர் முஹம்மது யுஸ்ரி பக்கீர் அப்போது உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset