நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போட்டித்தன்மையுடன் இருக்க தேசிய ஸ்திரத்தன்மையைப் பேணுங்கள்: பிரதமர் அன்வார்

கூச்சிங்: 

தற்போதைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் நாட்டின் ஸ்திரத்தன்மையை முதலில் பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர்  டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். 

அதன் பிறகே, நாட்டின் போட்டித்தன்மையை பராமரிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று பிரதமர் நினைவூட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகளை விதிக்க சமீபத்தில் எடுத்த முடிவு, நாட்டின் செழிப்பைப் பாதுகாப்பதில் ஒரு முக்கியமான நினைவூட்டலாகும் என்று பிரதமர் கூறினார்.

இன்றைய சூழலில், வளர்ந்த தேச அந்தஸ்தை அடைவது வழக்கமான மாற்றத்தின்  மூலம் அடைய முடியாது என்று அவர் குறிப்பிட்டார். 

எந்தவொரு விரைவான மாற்றமும் தவிர்க்க முடியாமல் அரசியல் அல்லது சமூக பதற்றம் போன்ற பிரச்சனைகளைக் கொண்டு வரும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset