நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் மாநில அரசின் வேலை வாய்ப்பு சந்தை; வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும்: அமிரூடின் ஷாரி

செலயாங்:

சிலாங்கூர் மாநில அரசின் வேலை வாய்ப்பு சந்தை மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும்.

சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி இதனை கூறினார்.

இந்த வேலை வாய்ப்பு சந்தை இன்று கோம்பாக் மாவட்டத்தில் நடைபெற்றது.

இதில் மொத்தம் 4,318 வேலை வாய்ப்புகள்  ஏற்படுத்தி தரப்பட்டன. குறிப்பாக  13,000 ரிங்கிட் வரையிலான சம்பளத்துடனான வேலை வாய்ப்புகள் இங்கு தரப்பட்டது.
 
மேலும் 3,074 காலி பணியிடங்களுக்கு குறைந்தபட்ச சம்பளமான மாதத்திற்கு 2,000 ரிங்கிட்டிற்கு மேல் வழங்கப்படுகின்றன.

இந்த திட்டத்தில் உற்பத்தி, தங்குமிடம் சேவை, உணவு, பானம் உட்பட பல துறைகளைச் சேர்ந்த சுமார் 26 நிறுவனங்கள் இணைந்துள்ளன.

உண்மையில் இங்கு 6,000 ரிங்கிட் முதல் 13,000 ரிங்கிட் வரை அதிக சம்பளம் வழங்கப்படுகிறது.

உதாரணமாக கார்சம் நிறுவனம் 13,000 ரிங்கிட் சம்பளம் வழங்குகிறது. 

இதன் பொருள், அவர்கள் சாதாரண வேலையை மட்டுமல்ல, நிர்வாக வேலை அல்லது வேலை தேடுபவர்களுக்கு தகுதி வாய்ந்த சலுகைகளையும் வழங்குகிறார்கள்.

ஆகவே இந்த  வேலை வாய்ப்புகளை வேலை தேடுபவர்கள் குறிப்பாக இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

செலயாங்கில் நடைபெற்ற வேலை வாய்ப்பு சந்தையை தொடக்கி வைத்த டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset