நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

Fu Wa, Feng Yi ஆகிய இரு பாண்டா கரடிகள் அடுத்த மாதம் சீனாவிற்கு திரும்ப அனுப்பப்படும்

புத்ராஜெயா: 

தேசிய மிருகக்காட்சிசாலையில் தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள Fu Wa, Feng Yi ஆகிய இரு பாண்டா கரடிகள் அடுத்த மாதம் சீனாவிற்கு திரும்ப அனுப்பப்படும் என்று இயற்கை வளச் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புதிய ஒப்பந்தத்தின்படி, இந்த ஆண்டு தொடங்கி 2035-ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டுகளுக்கு ஒரு புதிய ஜோடி பாண்டா கரடிகள் மீண்டும் அங்கிருந்து கொண்டு வரப்படும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 16-ஆம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங் மலேசியாவிற்கு மேற்கொண்ட மூன்று நாள்கள் அரசு முறை பயணத்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

ள Fu Wa, Feng Yi ஆகிய இரு பாண்டா கரடிகளும் ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் தேசிய மிருகக்காட்சிசாலையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

பாண்டா கரடிகள் ஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதிசெய்யவும், சர்வதேச அனுமதித் தேவைகளுக்கு இணங்கவும், மலேசியாவிலிருந்து சீனாவிற்குப் பயணம் செய்வதைப் பற்றி அறிந்துகொள்ள க்ரேட் பயிற்சியை மேற்கொள்ளவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேசிய மிருகக்காட்சிசாலையில் பார்வையாளர்கள்  Fu Wa, Feng Yi வை தூரத்திலிருந்து பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset