நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உணவகங்களுக்கு விதிக்கப்படும் கடும் விதிமுறைகள் அங்காடி கடைகளுக்கும் விதிக்கப்பட வேண்டும்: பிரெஸ்மா

கோலாலம்பூர்:

உணவகங்களுக்கு விதிக்கப்படும் விதிமுறைகள் அங்காடி கடைகளுக்கும் விதிக்க வேண்டும்.

பிரெஸ்மாவின் உதவித் தலைவர் அப்துல் முக்தாஹிர் எம். இப்ராஹிம் இதனை கூறினார்.

கோலாலம்பூரில் உரிமம் பெறாத அங்காடி வர்த்தகர்களை அனுமதிப்பட்டியலில் சேர்க்கும் அரசாங்கத்தின் சமீபத்திய முயற்சியை பிரெஸ்மா வரவேற்கிறது.

ஆனால் இந்தத் திட்டம் முழு ஆலோசனை, பரிசீலனையுடன் செயல்படுத்தப்பட வேண்டும்.

சாலையோர அங்காடி வர்த்தகர்களிடம் மிகவும் கட்டமைக்கப்பட்ட அணுகுமுறைக்கான பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸலேஹா முஸ்தபாவின் அழைப்பு பாராட்டுகிறேன்.

இந்தத் துறையில் ஒழுங்கையும் பொறுப்புணர்வையும் கொண்டுவருவதற்கான அரசாங்கத்தின் முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம்.

இருப்பினும் அத்தகைய கடைகள், உணவு லோரிகள் நிறுவப்பட்ட உணவகங்களின் வாசலில் இருக்கக் கூடாது 

இதற்கான பொருத்தமான இடங்களில் வைக்கப்பட வேண்டும். கோலாலம்பூர் மாநகர் மன்றம் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும் சரியான சுத்தம் செய்யும் வசதிகள், கழிப்பறைகள், கிரீஸ் பொறிகள் இருக்க வேண்டும். அவை கால்வாய் அருகில் இருக்கக்கூடாது.

பல அங்காடி விற்பனையாளர்கள் உரிமம் பெற்ற வளாகங்களுக்கு முன்னால் நேரடியாக செயல்பட்டு வருகின்றனர்.

அனுமதி இல்லாமல் மேசைகள், நாற்காலிகளை வைப்பதன் மூலம் பொது இடங்களை ஆக்கிரமிக்கின்றனர்.

இதனால்  கடுமையான விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்ட உணவகங்களின் விற்பனை குறைத்து வருகின்றது.

உரிமம் பெற்ற உணவக உரிமையாளர்கள் வாடகை, உரிமக் கட்டணங்கள், லெவி, வரி, ஊழியர்களின் ஊதியங்களைச் செலுத்துகின்றனர்.

ஆனால்  இந்த அங்காடி வர்த்தகர்கள் குறைந்தபட்ச மேல்நிலைச் செலவுகளுடன் செயல்படுகிறார்கள்.

எங்கள் கதவுகளுக்கு வெளியே மலிவான விலைகளில் உணவுகளை வழங்குகிறார்கள். இது நியாயமான போட்டி அல்ல.

ஆகவே இதுபோன்ற விவகாரங்களை கூட்டரசுப் பிரதேச அமைச்சும் கோலாலம்பூர் மாநகர் மன்றமும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று முக்தாஹிர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset