நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிறை இல்லாத தேசியக் கொடியை வெளியிடப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்க்கப்பட்டது: ரசாருடின் ஹுசேன் 

பெட்டாலிங் ஜெயா: 

சின் சியூ டெய்லி செய்தித்தாளில் பிறை இல்லாத தேசியக் கொடியையை வெளியிடப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்க்கப்பட்டது என்று அரச மலேசியக் காவல்துறை தலைவர் தான்ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் தெரிவித்தார். 

விசாரணை நிறைவடைந்த நிலையில் மேல் நடவடிக்கைகாக நேற்று விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்க்கப்பட்டது என்று அவர் கூறினார்.

இதுவரை, மொத்தம் 54 நபர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் மற்ற சாட்சிகளையும் அழைக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த செவ்வாய்க்கிழமை பதிப்பின் முதல் பக்கத்தில் பிறை இல்லாமல் தேசிய கொடியை அச்சிட்டு வெளியிட்டதற்காக சின் சியூ டெய்லி முன்பு மன்னிப்பு கேட்டது.

விசாரணை நடைபெற்று வரும் நிலையில், செய்தித்தாளின் தலைமை ஆசிரியர் மற்றும் துணை தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்படுவதற்கு முன்பு மூன்று மணி நேரம் போலீசில் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset