
செய்திகள் மலேசியா
நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெருநடை வீரர் சரவணனுக்கு பிரதமர் நிதியுதவி
புத்ரா ஜெயா:
நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெருநடை வீரர் சரவணனுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் நிதியுதவி வழங்கினார்.
கடந்த 1998ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 50 கிலோமீட்டர் பெருநடை போட்டியில் மலேசியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்து சாதனை படைத்தவர் பெருநடை வீரர் ஜி.சரவணன்.
ஜாகர்த்தா, மலேசியாவில் நடந்த சீ விளையாட்டுப் போட்டியிலும் அவர் தங்கப் பதக்கம் வென்றவர்.
பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த சரவணன் இப்போது நரம்பு தசை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மலேசியாவின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மொக்தார் டஹாரியும் இதே நோயினால் பாதிக்கப்பட்டார்.
பெருநடை வீரர் சரவணன் நோயினால் பாதிக்கப்பட்ட விவகாரம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கவனத்திற்கு வந்தது.
பிரதமரின் அரசியல் செயலாளர் போர்ஹான், இளைஞர் விளையாட்டு துறை துணை அமைச்சர் அடாம் அடில் நேற்று நேரடியாக சரவணனை சந்தித்து நலம் விசாரித்தனர்.
மேலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சார்பில் உதவிக்கரம் நீட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 19, 2025, 3:49 pm
சிலாங்கூர் மாநில அரசின் வேலை வாய்ப்பு சந்தை; வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும்: அமிரூடின் ஷாரி
April 19, 2025, 3:09 pm
போட்டித்தன்மையுடன் இருக்க தேசிய ஸ்திரத்தன்மையைப் பேணுங்கள்: பிரதமர் அன்வார்
April 19, 2025, 2:22 pm
Fu Wa, Feng Yi ஆகிய இரு பாண்டா கரடிகள் அடுத்த மாதம் சீனாவிற்கு திரும்ப அனுப்பப்படும்
April 19, 2025, 12:18 pm
பிரதமரின் தாய்லாந்து பயணம் இரு நாடுகளுக்கிடையே புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது
April 19, 2025, 11:47 am
மின்னியல் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி: அயூப் கான்
April 19, 2025, 11:46 am