செய்திகள் உலகம்
கத்திமுனையில் விமானத்தை கடத்திய நபர்; நடுவானில் சுட்டுக்கொலை
பெலிஸ்:
பெலிஸில் சிறிய ரக பயணிகள் விமானத்தை கத்தி முனையில் கடத்திய நபரை, பயணி ஒருவர் நடுவானில் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமெரிக்க நாடான பெலிஸ் எல்லையில் உள்ள கோரோஷல் எனும் சிறிய நகரில் இருந்து சுற்றுலா தலமான சான் பெட்ரோவுக்கு 14 பயணிகள், 2 விமானிகளுடன் சிறிய ரக விமானம் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென கத்திமுனையில் ஒருவர் விமானத்தை கடத்தினார். தன்னை இந்த நாட்டை விட்டு வெளியே கொண்டு சென்று விடுமாறு கோரிக்கை விடுத்தார். இதனால், விமானத்தில் பதற்றம் நிலவியது.
அப்போது, சுதாரித்துக் கொண்ட பயணிகளில் ஒருவர், தன்னிடம் இருந்த துப்பாக்கியால், அந்த நபரை சுட்டுக்கொன்றார். இந்த சம்பவத்தால் சுமார் 2 மணிநேரம் விமானம் வானில் வட்டமடித்து கொண்டிருந்தது. பிறகு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விமானத்தை கடத்த முயன்றது அமெரிக்காவைச் சேர்ந்த அகின்யேலா சாவா டெய்லர் என்பது தெரிய வந்தது.
இந்த கடத்தல் சம்பவத்தின் போது, விமானி உள்பட 3 பேரை அவர் கத்தியால் குத்தியுள்ளார். அதன்பிறகு, சுற்றுலா பயணி தன்னிடம் இருந்து லைசென்ஸ் பெற்ற துப்பாக்கியால், அந்த நபரை சுட்டுக் கொன்றது தெரிய வந்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 8, 2025, 4:54 pm
ஜகர்த்தா பள்ளிவாசலில் வெடிப்பு: 54 பேர் காயம்
November 8, 2025, 8:49 am
அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள் இன்று ரத்து
November 7, 2025, 12:42 pm
பிலிப்பைன்ஸை தாக்கிய கால்மேகி (Kalmaegi) சூறாவளி வியட்நாமையும் தாக்கியது: 6 விமான நிலையங்கள் மூடப்பட்டன
November 6, 2025, 8:55 pm
Kalmaegi சூறாவளி: பிலிப்பைன்ஸில் அவசரநிலை அறிவிப்பு
November 5, 2025, 3:13 pm
பாலஸ்தீன நிர்வாகத்தின் திறனை வளர்க்கப் பயிற்சி வழங்கவிருக்கும் சிங்கப்பூர்
November 5, 2025, 12:11 pm
நியூயார்க் நகர மேயராக ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார்
November 4, 2025, 5:10 pm
பிலிப்பைன்ஸை தாக்கிய Kalmaegi சூறாவளி: 150,000க்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்
November 4, 2025, 4:43 pm
