
செய்திகள் இந்தியா
வக்பு கவுன்சிலில் முஸ்லிம் அல்லாதவரை உறுப்பினராக நியமிப்பதை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து உச்ச நீதிமன்றம் நிறுத்தியது
புதுடெல்லி:
வக்பு திருத்த சட்டத்தை நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் வெற்றிகரமாக நிறைவேற்றியது மத்திய அரசு.
இந்த சட்டத்திற்கு எதிராக 90க்கும் அதிகமான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. குறிப்பாக திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, நடிகர் விஜயின் தவெக உள்ளிட்ட கட்சிகளும் பல்வேறு பொதுநல அமைப்புகளும் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இரண்டாவது நாள் விசாரணையாக இன்று நடைபெற்றது.
`நீங்கள் தடை செய்யப் போகிறீர்கள் என்றால்..!’
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ``இந்த வக்பு சட்டத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ நீங்கள் தடை செய்யப் போகிறீர்கள் என்றால், அது மிகவும் அரிதானதாகவே கருதப்படும். ஆனால் அதற்கு முன்பாக இந்த சட்டத்தின் நோக்கம் கடந்த கால வரலாறு உள்ளிட்டவற்றை நீதிமன்றம் கணக்கில் கொள்ள வேண்டும். காரணம் கிராமம், கிராமமாக வக்பு சொத்துக்கள் என மாற்றப்பட்டு வருகின்றது. மேலும் இது நாடாளுமன்றத்தால் நிறைவேற்றிக் கொண்டுவரப்பட்ட சட்டம் என்பதையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே இதில் எவரும் பாதகப்படக்கூடாது என்றே இந்த சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் விரிவான எழுத்துப்பூர்வ பதிலை ஒரு வாரத்தில் தாக்கல் செய்கிறோம். அதுவரை இடைக்கால உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க கூடாது” என கோரிக்கை முன்வைத்தார்.
இதற்கு பதில் அளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, ``இந்த விவகாரத்தில் முழுமையாக எந்த இறுதி உத்தரவும் பிறப்பிக்க எங்களுக்கு எந்த யோசனையும் இல்லை. ஆனால் சம்பந்தப்பட்ட தரப்பினர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
குறிப்பாக வக்பு கவுன்சில்களில் மாற்று மதத்தினர் உறுப்பினர்களாக இடம்பெறுவது மற்றும் 1995 சட்டத்தின் படி ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட வக்பு சொத்துக்களை மீண்டும் வகைப்படுத்துவது போன்றவற்றை நாங்கள் உன்னிப்பாக கவனிக்கிறோம்” என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
அப்போது பேசிய மத்திய அரசின் வழக்கறிஞர், ``எனில் ஒரு வார காலத்திற்கு இந்த வழக்கை ஒத்தி வைக்க வேண்டும். இந்த ஒரு வார காலத்திற்கு இந்த சட்டத்தின் படி நீதிபதிகள் குறிப்பிட்ட விஷயங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்” என உறுதி அளித்தார்.
வக்பு கவுன்சிலில் முஸ்லிம் அல்லாதவரை உறுப்பினராக நியமிப்பதை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து உச்ச நீதிமன்றம் நிறுத்தியது
அடுத்த விசாரணை தேதி வரை மத்திய வக்பு கவுன்சில் அல்லது மாநில வக்பு வாரியங்களில் எந்த நியமனங்களும் செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, வக்பு கவுன்சிலில் முஸ்லிம் அல்லாதவரை உறுப்பினராக நியமிப்பதை இந்த உத்தரவு நிறுத்தி வைத்துள்ளது.
மேலும், பயனர் சொத்துகளின் வக்பு சொத்துக்கள் அனைத்தும் அடுத்த விசாரணை தேதி வரை ரத்து செய்யப்படக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து வழக்கை மே 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், அப்போது சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடித்தன்மைக்கு சவால் செய்யும் மனுக்களுக்கு மத்திய அரசு தனது பதிலை தாக்கல் செய்ய அறிவுறுத்தி உள்ளது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 2, 2025, 5:01 pm
டெல்லியில் கனமழையால் விமானங்கள் ரத்து: வீடு இடிந்து விழுந்து 4 பேர் பலி
May 1, 2025, 7:59 pm
மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி: நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்
May 1, 2025, 12:09 pm
பாகிஸ்தான் - இந்திய எல்லைகளில் உள்ள பள்ளிவாசல்களில் பாங்கோசை நிறுத்தப்படுள்ளது: போ...
April 29, 2025, 3:43 pm
காஷ்மீரில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்களை பாதுகாப்பு மதிப்பீட்டு நடவடிக...
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உ...
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில...
April 27, 2025, 10:01 pm