நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தாய்லாந்து நாட்டு தலைநகர் பெங்கொக்கிற்கு இரு நாள் அலுவல் பயணம் மேற்கொண்டுள்ளார் 

பெங்கொக்: 

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தாய்லாந்து நாட்டிற்கு இரு நாட்கள் அலுவல் பயணம் மேற்கொண்டுள்ளார். 

உள்ளூர் நேரப்படி மதியம் 1.20 மணியளவில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் டொன் முவெங் அருகில் உள்ள தாய்லாந்து அரச இராணுவ விமான தளத்தில் விமானம் மூலம் வந்திறங்கினார். 

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமை தாய்லாந்து நாட்டின் துணைப்பிரதமர் சுரியா ஜுவாங்ரூங்ருவாங்கிட் , தாய்லாந்து நாட்டுக்கான மலேசியத் தூதர் பொங் யிக் ஜுய் ஆகியோர் வரவேற்றனர் 

பிரதமர் அன்வாருடன் முதலீடு, வர்த்தக, தொழிற்துறை அமைச்சர் தெங்கு டத்தோஶ்ரீ ஸப்ருல், வெளியுறவு அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோஶ்ரீ அம்ரான் முஹம்மத் சின், பொதுப்பணி துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி ஆகியோர் உடன் சென்றுள்ளனர். 

தாய்லாந்து நாட்டின் பிரதமர் பெதொங்தன் ஷினவர்தாவுடன் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பன்முக கூட்டத்தில் அன்வார் கலந்து கொள்வார் என அட்டவணையிடப்பட்டுள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset