நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தென்கிழக்கு ஆசிய மன்றத்தின் தலைவராக மலாயா பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் விலாஷினி சோமியா நியமனம்

பெட்டாலிங் ஜெயா: 

தென்கிழக்கு ஆசிய மன்றத்தின் தலைவராக மலாயா பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் விலாஷினி சோமியா நியமிக்கப்பட்டுள்ளார்.

1970-ஆம் ஆண்டில் இந்த மன்றம் நிறுவப்பட்டதிலிருந்து இந்தப் பதவியை வகிக்கும் முதல் தென்கிழக்கு ஆசியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

மலாயா பல்கலைக்கழகத்தின்  சமூக அறிவியல் கலை புலத்தில் பாலின ஆய்வு துறையில் மூத்த விரிவுரையாளரான விலாஷினி இவ்வாண்டு முதல் 2028 வரை தென்கிழக்கு ஆசிய மன்றத்தின் தலைவராகப் பணியாற்றுவார்.

அவரது பதவிக்காலம் மார்ச் 2026-ஆம் ஆண்டில் தொடங்குகிறது.

போர்னியோ முழுவதும் இனவியல் ஆராய்ச்சியில் கிட்டத்தட்ட 15 ஆண்டு அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பெல்லோஷிப்களை நடத்தியுள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset