நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப நடைமுறைகளையும் சட்டங்களையும் மதிப்பாய்வு செய்து திருத்த செய்ய வேண்டும்: அசாம் பாக்கி 

புத்ரா ஜெயா: 

அனைத்து அரசுத் துறைகளும் இனி பொருந்தாத பழைய சட்டங்களையும் செயல்முறைகளையும் மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தப்படுவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எம்ஏசிசி-யின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி கூறினார்.

அவை தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப திருத்தப்படும்.

அரசாங்க நிறுவனங்கள் குறித்த மக்களின் எதிர்மறையான கருத்துக்களைத் தவிர்க்க சட்ட சீர்திருத்தங்கள் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் அவர் குறிப்பிட்டார்.
 
சமூகம் மற்றும் அனைத்து பங்குதாரர்களின் தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்ய பழைய மற்றும் தெளிவற்ற நிலையான இயக்க நடைமுறைகளை மேம்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

எம்ஏசிசி உட்பட ஒவ்வொரு அரசுத் துறையும், குறிப்பாக பொதுமக்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தெளிவான அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும்.

ஊழலை எதிர்த்துப் போராட, அமலாக்கப் பணியாளர்களின் ஆடம்பரமான வாழ்க்கை முறைகளைக் கண்காணிப்பது உட்பட, ஊழியர்களைத் தொடர்ந்து கண்காணிப்பதன் அவசியத்தையும் அசாம் வலியுறுத்தினார்.

ஒரு சம்பவம் நிகழும்போது, ​​அரசாங்கம் மீது பெரும்பாலும் குற்றம் சாட்டப்படுகிறது.

அதே நேரத்தில் சில நேரங்களில் அரசாங்க நிறுவனங்களே ஒரு நல்ல கண்காணிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பை வழங்கத் தவறிவிடுகின்றன.

இந்தச் செயல் அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறது என்று அவர் விளக்கினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset