நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இளம்பெண் கடத்தல் வழக்கு: 50 வயது மதிக்கத்தக்க மற்றொரு சந்தேக நபர் 14 நாட்கள் தடுத்து வைப்பு

சிரம்பான்: 

கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி 16 வயது இளம்பெண்ணைக் கடத்த உடந்தையாக செயல்பட்டதாக கூறப்படும் 50 வயது சந்தேக நபர் ஒருவர் இன்று தொடங்கி 14 நாட்களுக்குத் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார். 

மாஜிஸ்திரேட் ஷுஹடா அம்ரான் இந்த தடுப்புக் காவலை 50 வயது சந்தேக நபருக்கு இன்று வழங்கியதாக நெகிரி செம்பிலான் மாநில காவல்துறை தலைவர் அஹ்மத் ஸஃபீர் யூசோஃப் கூறினார் 

சந்தேக நபர் நேற்று கோலாலம்பூரில் உள்ள செராஸ் பகுதியில் கைது செய்யப்பட்டார். 1961 கடத்தல் சட்டத்தின் செக்‌ஷன் 3(1)இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார் 

முன்னதாக, இந்த கடத்தல் வழக்கு தொடர்பான சந்தேக நபர் ஒருவரை காவல்துறை கிள்ளானில் உள்ள பண்டார் புக்கிட் திங்கியில் சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset