
செய்திகள் மலேசியா
கிழக்கு ஆப்பிரிக்க சுற்றுலாப் பயணியாக வேடமிட்டு கோக்கைன் போதைப் பொருளைக் கடத்த முயன்ற தாய்லாந்து பெண் கைது
புத்ரா ஜெயா:
மார்ச் 18-ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின், சர்வதேச வருகை முனையம் 1 இல் ஆப்பிரிக்காவிலிருந்து சுற்றுலாப் பயணியாக வேடமிட்டு 1 கிலோ கிரெம் எடையிலான கோக்கைன் போதைப் பொருளைக் கடத்த முயன்ற தாய்லாந்து பெண் கைது செய்யப்பட்டார்.
கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து சர்வதேச விமானம் மூலம் மாலை 7 மணியளவில் நாட்டிற்கு வந்த போது சம்பந்தப்பட்ட பெண் கைது செய்யப்பட்டதாக மத்தியப் பிரிவின் சுங்கத்துறை துணை இயக்குநர் ஜெனரல் அஹ்மத் தௌபிக் சுலைமான் தெரிவித்தார்.
அவரது பையை ஸ்கேன் செய்ததில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மற்றும் படங்கள் காணப்பட்டதை அடுத்து போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில் அவர் பரிசோதனைக்காக தடுத்து வைக்கப்பட்டார்."
அந்தப் பெண்ணின் பொருள்களை மேலும் ஆய்வு செய்ததில், கோக்கைன் எனச் சந்தேகிக்கப்படும் வெள்ளைப் பொடியைக் கொண்ட 16 பிளாஸ்டிக் பொட்டலங்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
நாட்டிற்குள் விநியோகிப்பதற்காக போதைப்பொருள் கடத்தப்படுவது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த வழக்கு 1952 ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B(1)(a) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 19, 2025, 12:18 pm
பிரதமரின் தாய்லாந்து பயணம் இரு நாடுகளுக்கிடையே புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது
April 19, 2025, 11:47 am
மின்னியல் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி: அயூப் கான்
April 19, 2025, 11:46 am
வளர்ந்த நாடாக மாற மலேசியாவுக்குப் புதிய அணுகுமுறை, முன்னேற்றம் தேவை: பிரதமர் அன்வார்
April 19, 2025, 10:37 am
நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெருநடை வீரர் சரவணனுக்கு பிரதமர் நிதியுதவி
April 18, 2025, 6:32 pm