நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2024 எஸ்.பி.எம் பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ஆம் தேதி அறிவிக்கப்படும்: மலேசிய கல்வி அமைச்சு அறிவிப்பு 

புத்ராஜெயா: 

2024 எஸ்.பி.எம் பொதுத்தேர்வு முடிவுகள் எதிர்வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று மலேசிய கல்வி அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது 

எஸ்.பி.எம் தேர்வு எழுதிய மாணவர்கள் காலை 10 மணி முதல் தத்தம் பள்ளிகளில் தங்களின் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சு கூறியது 

மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு முடிவுகளை வழங்கும் பள்ளி நிர்வாகத்தினர் அதனை ஒழுங்கு முறையில் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

2024 எஸ்.பி.எம் பொதுத்தேர்வுக்கு 402.956 மாணவர்கள் எழுதினர். நாடு முழுவதும் 3,337 தேர்வு எழுதும் மையங்கள் தயார் செய்யப்பட்டிருந்தன

தேர்வு எழுதிய மாணவர்கள் இணையம் வாயிலாகவும் அல்லது SMS குறுஞ்செய்தி வாயிலாகவும் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset