நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீனாவுடனான பரஸ்பர விசா விலக்குகள் கல்வி, சுற்றுலா துறைகளை மேம்படுத்தும்: விஸ்மா புத்ரா

பெட்டாலிங் ஜெயா: 

மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பரஸ்பர விசா விலக்கு ஒப்பந்தங்கள் கல்வி, சுற்றுலா, விளையாட்டுத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் விதமாக இருப்பதாக வெளியுறவு அமைச்சகம், விஸ்மா புத்ரா தெரிவித்தது. 

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகையுடன் இணைந்து சீனாவுடனான இந்த ஒப்பந்தங்கள், மக்களிடையேயான உறவுகளுக்கு முன்னுரிமை அளித்து, பரஸ்பர பயணம் மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை அதிகப்படுத்துவதாக விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மலேசியாவும் சீனாவும் 31 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

இதில் இரு நாடுகளுக்கும் இடையிலான பயணிகளுக்கு பரஸ்பர விசா விலக்கு அளிக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.

​​மலேசியர்கள் இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை விசா இல்லாமல் சீனாவுக்கு பயணம் செய்யலாம்.

அதே நேரத்தில் சீன நாட்டினர் அடுத்த ஆண்டு டிசம்பர் 31 வரை மலேசியாவிற்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அரசத் தந்திர உறவுகளின் 50-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த விலக்கு அளிக்கப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset