நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறப்பு வாகனப் பதிவு எண்களுக்கு இனி ஒப்புதல் இல்லை: டத்தோ ஹஸ்பி

கோலாலம்பூர்:

அரசாங்கம் இனி சிறப்பு வாகனப் பதிவு எண்களுக்கு ஒப்புதல் வழங்காது.

போக்குவரத்து துணையமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபுல்லா இதனை மக்களவையில் கூறினார்.

எந்தவொரு நிறுவனம், தனிநபர், அரசு சாரா அமைப்புகளுக்கு பயனளிக்கும் நோக்கில் சிறப்புப் பதிவு எண்களை வழங்குவதற்கு இனி ஒப்புதல்கள் வழங்கப்படாது.

சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு லாபம் ஈட்டும் வணிக நோக்கங்களுக்காக சிறப்புப் பதிவு எண்களை  இனி அங்கீகரிக்காது.

மாறாக, சிறப்புப் பதிவு எண்கள் இப்போது JPJeBid மூலம் ஏலத்திற்குத் திறக்கப்பட்டுள்ளன.

மேலும் வருமானம் கூட்டாட்சி ஒருங்கிணைந்த நிதியில் சேர்க்கப்பட்டுள்ளது என்றார்.

சிறப்பு வாகன எண் தகடு தொடரை அங்கீகரிப்பதில் பயன்படுத்தப்படும் வழிகாட்டுதல்கள், அளவுகோல்கள், சிறப்புத் தகடுகளின் விற்பனையிலிருந்து மொத்த வசூல் குறித்து  பாடாங் பெசார் ருஷ்தான் ருஸ்மி எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset