நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசியக் கொடி தலைகீழாக பறக்க விட்ட சம்பவம்; உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்: ஃபட்லினா

கோலாலம்பூர்:

தேசியக் கொடி தலைகீழாக பறக்க விட்ட சம்பவம் தொடர்பில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இதனை கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை நெகிரி செம்பிலானின் போர்ட்டிக்சனில் உள்ள சுங் ஹுவா சீனப்பள்ளியில் தேசியக் கொடி தலைகீழாக பறக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்த விசாரணையின் முடிவுகள் குறித்த அறிக்கைக்காக கல்வியமைச்சு காத்திருக்கிறது.

தேசியக் கொடியின் முக்கியத்துவம், உணர்திறன் குறித்து அனைத்து தரப்பினருக்கும் பலமுறை நினைவூட்டப்பட்ட ஒரு முக்கிய பிரச்சினையை இந்த சம்பவம் உள்ளடக்கியது.

கல்வியமைச்சு  முழுமையான விசாரணைக்காகக் காத்திருக்கிறோம்.

ஆனால் முழுமையான அறிக்கை கிடைத்தவுடன், நாங்கள் உறுதியான நடவடிக்கை எடுப்போம் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset