
செய்திகள் மலேசியா
குடியுரிமை விதியின் மாற்றங்கள் 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் நடைமுறைக்கு வரும்: டத்தோஶ்ரீ சைபுடின்
கோலாலம்பூர்:
குடியுரிமை விதியின் மாற்றங்கள் 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் நடைமுறைக்கு வரும்.
உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை மக்களவையில் தெரிவித்தார்.
வெளிநாட்டினரை மணந்து, தங்கள் குழந்தைகளுக்கு மலேசிய குடியுரிமை கிடைக்க வேண்டும் என்று விரும்பும் மலேசியப் பெண்களுக்கான புதுப்பிக்கப்பட்ட வழிமுறை அடுத்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வரும்.
கடந்த ஆண்டு அக்டோபரில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
திருத்தத்தைத் தொடர்ந்து, குடியுரிமை விதி 1964 நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, நாம் முதலில் முடிக்க வேண்டிய ஒரு முன்நிபந்தனை உள்ளது. அதில் 57 கட்டங்கள் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.
இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது மிரி நாடாளுமன்ற உறுப்பினர் சியூ சூன் மான் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
மதிப்பாய்வுக்கு பிறகு அமைச்சு கொள்முதல் செயல்முறையை நடத்தி இணைய சமர்ப்பிப்பை ஆதரிக்க விண்ணப்பப் படிவத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்று டத்தோஶ்ரீ சைபுடின் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 4, 2025, 4:50 pm
கொலை வழக்கில் மகனின் உடலை புதைத்த சந்தேக நபருக்கு ரொம்பினில் உள்ள அமைதியான இடம் தெரியும்: போலிஸ்
August 4, 2025, 4:38 pm
புதிய கூட்டுறவு சட்ட மசோதா டிசம்பரில் தாக்கல் செய்யப்படும்: இவோன் பெனடிக்
August 4, 2025, 12:28 pm
போலிசாரைத் தாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஆடவர் மாரடைப்பால் மரணமடைந்தார்
August 4, 2025, 12:27 pm
சிறப்பு வாகனப் பதிவு எண்களுக்கு இனி ஒப்புதல் இல்லை: டத்தோ ஹஸ்பி
August 4, 2025, 12:25 pm