நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவி ஷாரா மரண விசாரணை அறிக்கை; இன்று ஏஜிசியிடம் சமர்பிக்கப்படும்: ஐஜிபி

கோலாலம்பூர்:

மாணவி ஷாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை போலிஸ் சட்டத்தறை தலைவர் இன்று அட்டர்னி அலுவலகத்தில் (ஏஜிசி) சமர்ப்பிக்கும்.

தேசிய போலிஸ்படைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் காலித் இஸ்மாயில் இதனை தெரிவித்தார்.

ஷாரா  குடும்பத்தினர், அவரது மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பிரேத பரிசோதனை நடத்தாதது உட்பட, இந்த வழக்கில் அதிகாரிகள் முழுமையான விசாரணை நடத்தவில்லை என்று கூறி வருவதால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை முடிக்கப்பட்டுள்ளன.

மேலும் இன்று துணை அரசு வழக்கறிஞர்யிடம் சமர்ப்பிக்கப்படும் என்று முகமட் காலித் தெரிவித்தார்.

முன்னதாக சபாவின் பாப்பரில் துன் டத்து முஸ்தபா இடைநிலப் பள்ளியில் படிவம் 1 மாணவியின் மரணம் குறித்த விசாரணையை போலிசார் முடித்துவிட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset