
செய்திகள் மலேசியா
இந்தியர்களின் பிரச்சினைகளை அமைச்சரவையில் பேச தமிழ் பேசும் அமைச்சர் தேவை: டத்தோ லோகபாலா
கோலாலம்பூர்:
இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு அமைச்சரவையில் தமிழ் பேசும் அமைச்சர் தேவை.
பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா இதனை வலியுறுத்தினார்.
தமிழ் பேசும் அமைச்சரை உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்.
அப்போது தான் இந்தியர்களின் குரல் குறிப்பாக தமிழரின் குரல் அமைச்சரவையில் ஒலிக்கும்.
இப்போது அமைச்சரவையில் தமிழ் பேசக்கூடிய ஒரு தமிழ் அமைச்சர் இல்லை என்பது பெரும் வேதனையை அளிக்கிறது.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 ஆவது மலேசிய திட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கு என்று பெரிதாக எதுவும் இல்லை.
இதற்கு காரணம் நம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றி பேச அமைச்சரவையில் பேச ஆள் இல்லை. மலேசிய இந்தியர்களின் மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினர் தமிழ் பேசக் கூடியவர்கள்.
ஆகவே இதை அரசாங்கம் சீர் தூக்கி பார்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
பிபிபி கட்சியின் மத்திய செயலவை கூட்டத்திற்கு பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 4, 2025, 4:50 pm
கொலை வழக்கில் மகனின் உடலை புதைத்த சந்தேக நபருக்கு ரொம்பினில் உள்ள அமைதியான இடம் தெரியும்: போலிஸ்
August 4, 2025, 4:38 pm
புதிய கூட்டுறவு சட்ட மசோதா டிசம்பரில் தாக்கல் செய்யப்படும்: இவோன் பெனடிக்
August 4, 2025, 12:30 pm
குடியுரிமை விதியின் மாற்றங்கள் 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் நடைமுறைக்கு வரும்: டத்தோஶ்ரீ சைபுடின்
August 4, 2025, 12:28 pm
போலிசாரைத் தாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஆடவர் மாரடைப்பால் மரணமடைந்தார்
August 4, 2025, 12:27 pm