நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேஎல்ஐஏவில் நடக்கும் மோசடிகள் தொடர்பில் அரசு வெற்றாக பேசவில்லை; நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: டத்தோஶ்ரீ சைபுடின்

கோலாலம்பூர்:

கேஎல்ஐஏவில் நடக்கும் மோசடிகள் தொடர்பில் அரசாங்கம் வெறும் வெற்றாக பேசவில்லை.

ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை கூறினார்.

எம்ஏசிசி தேசிய நுழைவு, வெளியேறும் பதிவுகளை மறைத்து மோசடி செய்த ஒரு கும்பல் சம்பந்தப்பட்ட 50 வழக்குகளை விசாரித்து வருகிறது.

நீதிமன்றத்தில் இரண்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் 48 வழக்குகள் குற்றச்சாட்டுகள், உள் விசாரணைகள், நிர்வாக விசாரணைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில், எடுக்கப்பட்ட நடவடிக்கையைத் தான் நான் இங்கு கூறுகிறேன் அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

இது வெற்றுப் பேச்சு அல்ல.  யாராக இருந்தாலும், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்

இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து பெசுட் நாடாளுமன்ற உறுப்பினர் சே முகமது சூல்கிப்லி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset