நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலிசாரைத் தாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஆடவர் மாரடைப்பால் மரணமடைந்தார்

கப்பாளா பாத்தாஸ்:

போலிசாரைத் தாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஆடவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

பினாங்கு மாநில போலிஸ் தலைவர் டத்தோ முகமது அல்வி ஜைனல் அபிடின் இதனை தெரிவித்தார்.

இந்தோனேசிய ஆடவர் ஒருவர்  நேற்று மாலை தாமான் புக்கிட் ஜம்புலில் ஒரு போலிஸ் அதிகாரியை தாக்கி ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்.

சம்பந்தப்பட்ட ஆடவர் சுங்கை நிபோங் காவல் நிலையத்தில் அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில்  நேற்று இரவு காவல் நிலையத்தில் இருந்தபோது சந்தேக நபர் திடீரென மயக்கமடைந்து, ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அவர் மருத்துவமனை வந்தவுடன் இறந்துவிட்டார்.

அவரது மரணம் மாரடைப்பால் ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset