நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டொயோட்டா தொழில்நுட்ப கல்வி திட்டத்தின் கீழ் டேஃப் கல்லூரியில் 3,000 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்: டத்தோ அசோஜன்

கோலாலம்பூர்:

டொயோட்டா தொழில்நுட்ப கல்வி திட்டத்தின் கீழ் டேஃப் கல்லூரியில் 3,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

டேஃப் கல்லூரியின் இயக்குநரும் மஇகா உதவித் தலைவருமான டத்தோ அசோஜன் இதனை கூறினார்.

அரசு, தனியார் உயர் கல்வி கூடங்களுடனான டொயோட்டா தொழில்நுட்ப கல்வி திட்ட ஒப்பந்த கையெழுத்திடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இக்கல்வி திட்டத்திற்கான உடன்படிக்கையில் டேஃப் கல்லூரியும் கையெழுத்திட்டது.

அதன் அடிப்படையில் இன்றைய நிகழ்வு ஒரு வரலாற்றுப்பூர்வ நிகழ்வாக நான் பார்க்கிறேன்.

காரணம் இக்கல்வித் திட்டத்திற்காக டேஃப் கல்லூரி கடந்த 2005ஆம் ஆண்டு முதல் டொயாட்டா நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

கிட்டத்தட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் இந்த கல்வி திட்டத்தின் வாயிலாக பயிற்சி பெற்றுள்ளனர்.

குறிப்பாக பயிற்சிக்குப் பின் அம்மாணவர்கள் டொயோட்டா நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

இதுதான் இந்த திட்டத்தின் மகத்தான வெற்றியாகும்.

கல்விக்கு பின் வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவது தான் டேஃப் கல்லூரியின் முதன்மை இலக்காக உள்ளது.

ஆகையால் டொயோட்டா நிறுவனத்துடனான இந்த ஒத்துழைப்பு தொடர வேண்டும்.

இதன் வாயிலாக இன்னும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெற வேண்டும்.

மேலும் இதுபோன்ற திட்டங்களுக்கு தொடர்ந்து வழிகாட்டியாக இருக்கும் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கும் எங்களின் நன்றி என்று டத்தோ அசோஜன் கூறினார்.

டொயோட்டா தொழில்நுட்ப கல்வி திட்டத்தில் கிட்டத்தட்ட 25 உயர் கல்விக்கூடங்கள் கையெழுத்திட்டன.

மூன்று தனியார் கல்லூரிகளை தவிர்த்து மற்ற அனைத்துமே அரசாங்க உயர் கல்விக்கூடங்கள் ஆகும்.

இதில் டேஃப் கல்லூரிக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது இந்த கல்லூரிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும்.

அதே வேளையில் டேஃப் கல்லூரியில் பல கல்வி திட்டங்கள் உள்ளன. இந்த கல்வித் திட்டங்கள் அனைத்துமே வேலைக்கு உத்தரவாதம் வழங்குகின்றன.

ஆகவே வாழ்க்கையில் வெற்றி பெற விரும்ப மாணவர்கள் இப்போதே டேஃப் கல்லூரியில் இணையலாம் என்று அதன் நிர்வாகி டத்தோ இப்ராஹிம் ஷா இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset