நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சின் சியூ டெய்லி நாளிதழின் தலைமை செய்தி ஆசிரியர், துணை ஆசிரியர் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும்: ஐ.ஜி.பி. டான்ஶ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தகவல் 

பெட்டாலிங் ஜெயா: 

நாட்டின் முன்னணி சீன நாளிதழான சின் சியூ டெய்லியின் தலைமை செய்தி ஆசிரியர், துணை செய்தி ஆசிரியர் இருவரிடமும் காவல்துறை வாக்குமூலங்களைப் பெறும் என்று அரச மலேசிய காவல்படை தலைவர் டான்ஶ்ரீ ரஸாருதீன் ஹுசைன் கூறினார் 

அந்த நாளிதழின் முதல் பக்கத்தில் நாட்டின் தேசிய கொடியான ஜாலூர் கெமிலாங் கொடியில் பிறை இல்லாமல் நாளிதழ் பிரசுரிக்கப்பட்டது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இன்று அவர்கள் அழைக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார். 

பேராக் மாநிலத்தில் உள்ள நிருபர் ஒருவர் கொடுத்த போலீஸ் புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்படுகிறது. 

1963 சின்னம், பெயர்கள் சட்டத்தின் செக்‌ஷன் 3(1)(c) இன் கீழ் மற்றும் 1984 அச்சு, பதிப்பக சட்டத்தின் செக்‌ஷன் 4(1)(b)இன் கீழும் விசாரணை நடத்தப்படும் 

முன்னதாக, சின் சியூ டெய்லி நாளிதழில் ஜாலுர் கெமிலாங் தேசிய கொடியில் பிறை இல்லாமல் பிரசுரிக்கப்பட்ட விவகாரத்தில் நாடு முழுவதும் 13 போலீஸ் புகார்கள் கேட்டுக்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset