நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் மூன்று நாள் அரசு முறை பயணத்தை முடித்து கொண்டு சீனா அதிபர் ஷி ஜின்பிங் கம்போடியா புறப்பட்டார் 

கோலாலம்பூர்: 

மலேசியாவிற்கான மூன்று நாள் அரசு முறை பயணத்தை முடித்து கொண்டு இன்று சீனா அதிபர் ஷி ஜின்பிங் கம்போடியா நாட்டிற்குப் புறப்பட்டு சென்றார். 

அதிபர் ஷி ஜின்பிங், சீனா நாட்டு பேராளர்கள் அனைவரையும் ஏர் சீனா விமானம் ஏற்றிக்கொண்டு சென்றது. 

அவர்கள் அனைவரையும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், வெளியுறவு துறை அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மத் ஹசான் வழியனுப்பி வைத்தனர். 

மலேசியாவின் பல்லின மக்களின் பாரம்பரிய கலாச்சார படைப்புகள் கொண்டு இந்த வழியனுப்பும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது 

மலேசியாவைத் தொடர்ந்து சீனா அதிபர் ஷி ஜின்பிங் கம்போடியா நாட்டிற்குச் செல்கிறார். முன்னதாக, மலேசியா- சீனா இரு நாடுகளுக்கும் இடையில் 31 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்பது குறிப்பிடத்தக்கது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset