நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரிக்கு எதிராக கலிப்போர்னியா மாநிலம் வழக்குத் தொடுத்துள்ளது

கலிப்போர்னியா: 

அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப்பின் வரிகளை எதிர்த்து கலிபோர்னியா மாநிலம் வழக்குத் தொடுத்துள்ளது.

டிரம்ப்பின் வரிகளுக்கு எதிராக வழக்குத் தொடுத்த முதல் மாநிலமாக கலிபோர்னியா திகழ்கிறது.

வரிகளைச் செயல்படுத்த டிரம்ப்புக்கு அதிகாரம் அளிக்கும் அவசரநிலைக்கு எதிராக கலிபோர்னியா கேள்வி எழுப்பியிருக்கிறது.

ஆனால் அனைத்துலக வர்த்தகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்வதற்கே வரிகள் விதிக்கப்பட்டதாக வாதிட்ட வெள்ளை மாளிகை, அவ்வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது. 

அமெரிக்க வர்த்தகத்தை அழித்துக்கொண்டிருக்கும் இந்தத் தேசிய நெருக்கடியைத் தொடர்ந்து சமாளிக்கப் போவதாகவும் வெள்ளை மாளிகை கூறியிருக்கிறது.

கலிபோர்னியா உலகின் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதாரமாக உள்ளது.

அமெரிக்காவின் பெரும்பாலான மாநிலங்களையும் இதர நாடுகளையும் அது மிஞ்சி நிற்பதாக BBC குறிப்பிடுகிறது.

அமெரிக்காவின் விவசாயம் உள்ளிட்ட உற்பத்திகளில் கலிபோர்னியாவின் பங்கு மிக அதிகம்.

உலகில் பாதாம் உற்பத்தியில் 82 விழுக்காடு கலிபோர்னியாவிலிருந்து வருகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset