நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா- சீனா இரு நாடுகளுக்கும் இடையே அரச தந்திர உறவு மேலோங்க செய்யும்: மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் நம்பிக்கை 

கோலாலம்பூர்: 

மலேசியா- சீனா இரு நாடுகளுக்கும் இடையே அரச தந்திர உறவு மேலோங்க செய்யப்படும் என்று தாம் நம்புவதாக மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் கூறினார் 

தற்கால புவி அரசியலில் சவாலான சூழல் நிலவுவதால் இரு நாடுகளும் தொடர்ந்து அனைத்து துறைகளிலும் நட்புறவோடு பழகும் என்று அவர் தெரிவித்தார். 

ஆழமான பொருளாதார முன்னெடுப்பு, தொழிற்துறைக்கான தொடர் சங்கிலி, கூட்டு ஒத்துழைப்பு மற்றும் கூட்டு பயனடைவது போன்ற விவகாரங்களில் மலேசியா கூடுதல் அக்கறை கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார் 

ஆக, சீனாவின் முதலீட்டு நிறுவனங்கள் யாவும் மலேசியாவில் தங்களின் முதலீட்டு நடவடிக்கைகளை அதிகளவில் மேற்கொள்வார்கள் என்று தாம் நம்புகிறேன். 

மேலும், ஜொகூர்- சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் சீனா முதலீடு செய்யலாம். காரணமாக இந்த பகுதியானது சிறப்பம்சங்கள் கொண்டிருப்பதாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset