நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளிக்கு 50,000 ரிங்கிட் மானியம்; பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவது பெற்றோரின் கடமையாகும்: பிரபாகரன்

கோலாலம்பூர்:

பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவது பெற்றோரின் கடமையாகும்.

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் இதனை கூறினார்.

செந்தூல் அரசு தமிழ்ப்பள்ளிக்கு இன்று 50,000 ரிங்கிட் மானியம் வழங்கப்பட்டது.

பத்து நாடாளுமன்ற தொகுதியின் சார்பில் இம்மானியம் வழங்கப்பட்டது.

இப் பள்ளியின் மேம்பாட்டுத் திட்டங்கள், மாணவர்களின் கல்வித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் நோக்கில் இம் மானியம் வழங்கப்பட்டது.

இதே போன்று பத்து நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பள்ளிகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.

குறிப்பாக தொகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளி, மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு  உரிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

வரும் காலங்களிலும் இது தொடரும் என்று பிரபாகரன் கூறினார்.

இதனிடையே தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக பதிவுகள் காட்டுகிறது.

இதற்கு இந்திய சமுதாயத்தின் பிறப்பு விகிதம் உட்பட பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

எது எப்படி இருந்தாலும் தமிழ்ப்பள்ளிகளை காப்பது அனைவரின் பொறுப்பாகும்.

குறிப்பாக பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்புவது பெற்றோரின் கடமையாகும் என்று பிரபாகரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset