நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எஸ்ஆர்சி சிவில் வழக்கு; 42 மில்லியன் ரிங்கிட் சவூதி அரேபிய நன்கொடை அல்ல: நஜிப்

புத்ராஜெயா:

எஸ்ஆர்சி சிவில் வழக்கில் 42 மில்லியன் ரிங்கிட் சவூதி அரேபிய நன்கொடை அல்ல என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ஒப்புக் கொண்டார்.

நேற்று இங்குள்ள உயர் நீதிமன்றத்தில் தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட 42 மில்லியன் ரிங்கிட் தொகைக்கும் சவூதி அரேபியாவிலிருந்து வந்த நன்கொடைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

எஸ்ஆர்சி, அதன் துணை நிறுவனமான காண்டிங்கன் மென்டாரி ஆகியவற்றால் அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், எஸ்ஆர்சி இன்டர்நேஷனல்  நிறுவனத்தின் வழக்கறிஞர் குவான் வில் சென் குறுக்கு விசாரணை செய்தபோது முன்னாள் பிரதமர் இதை ஒப்புக்கொண்டார்.

மேலும் அப்போது, ​​அது சவூதி அரேபியாவிலிருந்து வந்த நன்கொடை என்று நினைத்தேன் என்று நஜிப் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset