நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாற்றுத் திறனாளி ஓய்வூதியத்தை பெறுவதற்காக போலி ஆவணங்களை உருவாக்கும் கும்பலை சொக்சோ, எம்ஏசிசி முறியடித்தன

கோலாலம்பூர்:

மாற்றுத் திறனாளி ஓய்வூதியத்தை பெறுவதற்காக போலி ஆவணங்களை உருவாக்கும் கும்பலை சொக்சோ, எம்ஏசிசி முறியடித்துள்ளன.

சொக்சோவின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முஹம்மது அஸ்மான் இதனை கூறினார்.

மோசடியான சலுகை கோரிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்காக எம்ஏசிசியுடன் ஒத்துழைப்பை தொடர சொக்சோ தொடர்ந்து உறுதி கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில் Ops Stroke என்ற அதிரடி நடவடிக்கை தொடங்கப்பட்டது.

இது கடந்த ஆண்டு செப்டம்பர் 3 முதல் இரு நிறுவனங்களுக்கிடையேயான நெருக்கமான ஒத்துழைப்பின் மூலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

உளவுத்துறை, விசாரணை மூலம், 1969 ஆம் ஆண்டு ஊழியர் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் (சட்டம் 4) கீழ், ஊனமுற்றோர் ஓய்வூதியப் பலன்களைப் பெறுவதற்காக போலி ஆவணங்களைத் தயாரிப்பதில் சதி செய்ததாக நம்பப்படும் காப்பீடு செய்யப்பட்ட நபர்கள், மூளையாகச் செயல்பட்டவர்கள் என ஆறு பேர்  கைது செய்யப்பட்டனர்.

தவறான ஆவணங்கள் விளைவாக வழங்கப்பட்ட சலுகைகளின் அளவு தோராயமாக 220,000 ரிங்கிட்டை எட்டியதாக ஆரம்ப விசாரணையின் முடிவுகள் கண்டறிந்தன.

இருப்பினும் சொக்சோவின் விரைவான நடவடிக்கை, திட்டமிடப்பட்ட இழப்பு அதிகமாக இருப்பதைத் தடுப்பதில் வெற்றி பெற்றது. 

மேலும் ஆவண மோசடி சிண்டிகேட் உடனடியாகக் கையாளப்படாவிட்டால், மதிப்பிடப்பட்ட இழப்பு 3.78 மில்லியன் ரிங்கிட்டை எட்டக்கூடும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset