நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு தைப்பூச கொண்டாட்டங்களை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு இலவச ஃபெர்ரி சேவை

ஜார்ஜ்டவுன்:

பினாங்கு தைப்பூச கொண்டாட்டங்களை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு இலவச ஃபெர்ரி சேவை வழங்கப்படவுள்ளது.

எஸ்பிபிபி தலைவர் டத்தோ யோ சூன் ஹின் இதனை தெரிவித்தார்.

மலேசிய பயணிகள் வரும் ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் தைப்பூச கொண்டாட்டத்துடன் இணைந்து இரண்டு நாட்களுக்கு இந்த சேவைகளை அனுபவிக்கலாம்.

இலவச கட்டணத்தில் பட்டர்வொர்த்தில் உள்ள சுல்தான் அப்துல் ஹலீம் தளத்திலிருந்து, ஜார்ஜ்டவுனில் உள்ள ராஜா துன் உடா தளம் வரை இருவழி பயணம் அடங்கும்.

ஜார்ஜ்டவுனில் உள்ள ராஜா துன் உடா தளம் வரை இருவழி பயணம் மேற்கொள்ளலாம்.

மேலும் சேவை நடவடிக்கைகள் பிப்ரவரி 2 ஆம் தேதி அதிகாலை 3 மணி வரை நீட்டிக்கப்படும் என்று அவர் கூறினார்.

ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆம் தேதிகளில் படகு சேவை நள்ளிரவு 12 மணி முதல் இரவு 11.30 மணி வரை செயல்படும், பிப்ரவரி 2 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை நடவடிக்கைகள் தொடரும்.

பொதுமக்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.

எஸ்பிபிபி, பிபிஎஸ்பி-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக சமீபத்திய படகு அட்டவணைகளைப் பார்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset