செய்திகள் மலேசியா
பெர்மிம் பேரவை ஏற்பாட்டில் இந்திய முஸ்லிம் தொழில்முனைவோரை உருவாக்கும் பட்டறை
கப்பாளா பத்தாஸ்:
இந்திய முஸ்லிம் சமூகத்தில் தொழில்முனைவோர், எதிர்கால தொழில்முனைவோரை உருவாக்கும் நோக்கில் மாபெரும் பயிற்சி பட்டறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக பெர்மிம் எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் தேசிய பேரவையின் தலைவர் ஷேக் பரிதுத்தீன் அன்வர்தீன் கூறினார்.
இந்த முயற்சி இந்திய முஸ்லிம்களின் பொருளாதார வளர்ச்சியை ஒழுங்கமைக்கப்பட்ட, உயர்தாக்கம் கொண்ட முறையில் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
புவாட் சம்பாய் ஜாடி என்பது மலேசிய இந்திய முஸ்லிம் தேசிய பேரவையின் கீழ் இயங்கும் பொருளாதார மேம்பாட்டு பிரிவு ஆகும்.
புவாட் சம்பாய் ஜாடி என்ற கோட்பாட்டை மையமாகக் கொண்டு இது செயல்படுகிறது.
இது சமூக தொழில்முனைவோர் வளர்ச்சிக்கான தளமாகவும், இலாப நோக்கமற்ற தொழில்முனைவு அமைப்பாகவும் செயல்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மலேசிய இந்திய முஸ்லிம் சமுதாயத்தை முன்னணி தொழில்முனைவு சமூகமாக உருவாக்குதல், நிலைத்த, போட்டித்திறன் கொண்ட பொருளாதார சூழலை கட்டியெழுப்புதல், தொழில்துறை நிபுணர்களின் நடைமுறை அறிவுப் பகிர்வு, தொழில்முனைவு மனப்பாங்கு, ஒழுக்க வளர்ச்சி, வணிக வலையமைப்பு, கூட்டாண்மை வலுப்படுத்தல், எதிர்கால தலைவர்கள் உருவாக்குதல் போன்ற திட்டங்களும் இதில் அடங்கும்.
இந்நிலையில் கப்பாளா பாத்தாஸ் ஹோட்டல் ஸ்ரீ மலேசியாவில் மாஸ்டர் சயீத் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற இப் பட்டறையை டாக்டர் நூருல் பாஸீர், ஹாஜி ஷெய்க் சைஃபுல்லா ஆகியோர் வழிநடத்தினார்கள்.
இப் பட்டறையில் இந்திய முஸ்லிம் சமூகத்தில் தொழில்முனைவோர் மற்றும் எதிர்கால தொழில்முனைவோரை உருவாக்கும் நோக்கில் பல நல்ல ஆலோசனைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 23, 2026, 12:30 pm
பினாங்கு தைப்பூச கொண்டாட்டங்களை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு இலவச ஃபெர்ரி சேவை
January 23, 2026, 11:29 am
மாற்றுத் திறனாளி ஓய்வூதியத்தை பெறுவதற்காக போலி ஆவணங்களை உருவாக்கும் கும்பலை சொக்சோ, எம்ஏசிசி முறியடித்தன
January 23, 2026, 9:19 am
எஸ்ஆர்சி சிவில் வழக்கு; 42 மில்லியன் ரிங்கிட் சவூதி அரேபிய நன்கொடை அல்ல: நஜிப்
January 22, 2026, 4:51 pm
பண மோசடியால் பாதிக்கப்பட்ட 40 பேருக்கு நீதி கோரி பேங்க் நெகாராவில் மகஜர் வழங்கப்பட்டது: டத்தோ கலைவாணர்
January 22, 2026, 12:59 pm
