செய்திகள் மலேசியா
சிங்கப்பூரில் முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்தவருக்குச் சிறை
சிங்கப்பூர்:
முதலீட்டாளர்களிடம் வாங்கிய தொகையைத் தமது சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்திய ஆடவருக்கு நான்கு ஆண்டுகள், 11 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மதர்சா மரைக்கார் முகமது பகாரூடின் என்ற 48 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசி முதலீட்டாளர்களின் பணத்தைக் கொண்டு தமது கடன்களை அடைத்துள்ளார்.
2017ஆம் ஆண்டு தமது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் 3 விழுக்காடு வரையிலான வட்டி தருவதாகப் பகாரூடின் கூறியுள்ளார்.
இதையடுத்து நான்கு முதலீட்டாளர்கள் 865,000 வெள்ளியை ஆடவரின் நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
2018ஆம் ஆண்டு தமது மற்றொரு நிறுவனமான நாணய, நிறுவனத்தில் இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து பகருதீன் முதலீட்டாளர்களின் பணத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார்.
மேலும் தமது தொழில் நண்பரான ஃபரூக் என்பவரையும் பகாரூடின் மோசடி செய்துள்ளார்.
ஃபரூக் சொத்து, வாகனங்களை விற்பனை செய்பவர். ஃபரூக் சொத்து வாங்கக் கொடுத்த 2.9 மில்லியன் வெள்ளியில் 500,000 வெள்ளியைக் கடன் அடைக்கப் பகாரூடின் பயன்படுத்திக் கொண்டார்.
பகாரூடின் மீது சந்தேகமடைந்த ஃபரூக் தமது பணத்தைக் கேட்டபோது 2.4 மில்லியன் வெள்ளி மட்டுமே கிடைத்தது. இதையடுத்து அவர் காவல்துறையில் புகார் கொடுத்தார்.
விசாரணையில் முதலீட்டாளர்கள் பணம் மலேசியாவில் திருட்டுப்போனதாகப் பகாரூடின் பொய்யுரைத்தார்.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைப் பகாரூடின் ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 14, 2026, 5:36 pm
அடையாள அட்டை கட்டணத்தைத் தவிர்க்க பொய் புகார் செய்த பெண்ணுக்கு RM1000 ரிங்கிட் அபராதம்
October 14, 2026, 5:09 pm
சவூதி அரேபியாவில் மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
October 14, 2026, 4:13 pm
ஆலயங்களை சுத்தம் செய்யும் முஸ்லிம் மாணவர்களின் செயல் ஒரு மதப் பிரச்சினை அல்ல: டத்தோ சிவக்குமார் கண்டனம்
October 14, 2026, 4:09 pm
28 பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்தது; கிள்ளான் பள்ளத்தாக்கு, ஜோகூரில் பாதிப்புள்ள பகுதிகள் அதிகரிப்பு
October 14, 2026, 3:54 pm
1எம்.டி.பி வழக்கு விசாரணை: தண்டனையை ஒத்திவைக்கும் நஜிப் ரசாக்கின் விண்ணப்ப மனு தள்ளுபடி
October 14, 2026, 3:33 pm
மலாக்காவில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை அக்டோபர் 15 முதல் மீண்டும் இயங்கும்: கல்வி இலாகா அறிவிப்பு
October 14, 2026, 3:18 pm
ரியாத்தில் உள்ள மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: முஹம்மத் ஹசான்
October 14, 2026, 3:17 pm
