நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெஅடிலான் கட்சித் தேர்தலில் பண அரசியலா?; விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்: பிரபாகரன்

கோலாலம்பூர்:

கெஅடிலான் கட்சித் தேர்தலில் நடந்ததாக கூறப்படும் பண அரசியல் விவகாரத்தில் கட்சி தேர்தல் குழு விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்.

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் இதனை கூறினார்.

கெஅடிலான்  தொகுதித்  தேர்தல்களில் பெருநாள் பணம் என்ற வீடியோ பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக பத்து தொகுதி கெஅடிலான் தேர்தலில் போட்டியிடும் பிரபாகரனுக்கு வாக்களியுங்கள்.

இப்போது 100 ரிங்கிட். தேர்தல் தினத்தன்று 100 ரிங்கிட். அவர் வெற்றி பெற்றால் போன்ஸ் என அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து முன்னாள் கூட்டரசுப் பிரதேச கெஅடிலான் தலைவரும் முன்னாள் பத்து தொகுதி  தலைவர் அசென் மாட் ராசிப் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் கட்சித் தேர்தலில் வாக்குகளை பெறுவதற்கான நான் யாருக்கும் பணம் கொடுக்க உத்தரவிடவில்லை.

வீடியோவைப் பார்க்கும்போது வாக்காளர்களுடன் நோன்பு துறக்கும் விழாவில் நான் பணம்  கொடுத்தேன் என்று கூறுகிறார்கள்.

அப்படியொரு சம்பவம் முற்றிலும் நடக்கவில்லை. மேலும் அது என் அணியின் அட்டவணையிலும் இல்லை.

இவ்விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் நான் தயாராக உள்ளேன் என்று பிரபாகரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset