செய்திகள் மலேசியா
சட்டத்தை மீறிய தைரியம்: காவல் நிலையத்துக்குள்ளேயே நடந்த கைகலப்பில் 5 பேர் கைது
ஷா அலாம்:
காவல் துறையினரை மதிக்காமல், கடந்த திங்கட்கிழமை கிள்ளான் மேரு காவல் நிலையத்திற்குள்ளேயே சண்டையில் ஈடுபட்ட ஐந்து ஆண்கள் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
“ஆரம்பக்கட்ட விசாரணையில், மூன்று உள்ளூர் ஆண்கள் புகார் அளிக்க காவல் நிலையத்துக்கு வந்துள்ளனர். அப்போது திடீரென மேலும் ஐந்து பேர் அங்கு வந்துள்ளனர்.
“இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அந்த ஐந்து பேர் கொண்ட குழுவில் ஒருவர் இரும்புக் கம்பியால் புகார் அளித்தவரைத் தாக்கியுள்ளார்.
“இந்தக் கலவரத்தில் காவல் நிலையத்தின் தொலைக்காட்சி சேதமடைந்தது. அதன் பின்னர் சந்தேகநபர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்,” என கிள்ளான் வடக்கு மாவட்ட காவல் துறை தலைவர், உதவி ஆணையர் எஸ். விஜய ராவ் தெரிவித்தார்.
இதையடுத்து, 28 முதல் 41 வயதுக்குட்பட்ட ஐந்து உள்ளூர் ஆண்களைப் போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“இந்தச் சம்பவம், இரு தரப்பினருக்கிடையேயான கருத்து வேறுபாட்டால் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
“இந்த வழக்கு குற்றச் சட்டத்தின் பிரிவு 148, 427, 324, காவல் சட்டம் 1967 இன் பிரிவு 90, ஆபத்தான ஆயுதங்கள் சட்டம் 1958 இன் பிரிவு 6 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
“அனைத்து சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைக்காக நாளை, மார்ச் 5 வரை மூன்று நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்றார் அவர்.
இதற்கிடையில், மேலும் சில சந்தேகநபர்களைப் போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
“விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரும் ஊகங்களைக் பரப்ப வேண்டாம்.
“இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் உள்ளவர்கள், கிள்ளான் வடக்கு மாவட்ட காவல் தலைமையகம் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்புகொள்ள வேண்டும்,” என அவர் கேட்டுக்கொண்டார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 4, 2026, 10:30 pm
3 வாரங்களில் RM 1 பில்லியன்: SARA மூலம் 1.25 கோடி மக்கள் பயன் பெற்றனர்
March 4, 2026, 5:13 pm
உரிமம் இன்றி இயங்கிய மர தொழிற்சாலைகள் மீது வனத்துறையின் அதிரடி சோதனை
March 4, 2026, 4:50 pm
பகாங் அரசு ஊழியர்களுக்கு 1,000 ரிங்கிட் சிறப்பு உதவி: வான் ரோஸ்டி
March 4, 2026, 4:49 pm
