நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தலைவர் வேறு, தலைமைத்துவம் வேறு என்பதில் இந்திய முஸ்லிம் சமுதாயம் தெளிவு பெற வேண்டும்: டத்தோ வீரா ஷாகுல்

கோலாலம்பூர்:

தலைவர் வேறு, தலைமைத்துவம் வேறு என்பதில் இந்திய முஸ்லிம் சமுதாயம் தெளிவு பெற வேண்டும்.

முக்மிம் ஒருங்கிணைப்பாளர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் இதனை கூறினார்.

சிம்ஸ் எனப்படும் கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய முஸ்லிம் நட்புறவு சங்கத்தில் நோன்பு திறப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது.

சமுதாயத்தில் உள்ள தலைவர்களை ஒரே இடத்தில் ஒன்றிணைந்துள்ள சிம்ஸ் இயக்கத்திற்கு எனது பாராட்டுகள்.

நம் சமுதாயத்தில் 100க்கும் மேற்பட்ட இயக்கங்கள் உள்ளன. இதில் எத்தனை இயக்கங்கள் துடிப்புடன் செயல்படுகின்றன என்பது கேள்விக்குறி தான்.

அதே வேளையில் அனைவரும் தலைவராக வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ளது.

எது எப்படி இருந்தாலும் தலைவர் வேறு தலைமைத்துவம் வேறு என்பதை சமுதாய மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக இந்திய முஸ்லிம் சமுதாயம் இரு குடையின் கீழ் இணைய வேண்டும்.

இது தான் முக்கியம். இந்திய முஸ்லிம்கள் ஒன்றிணைந்தால் சமுதாயம் வெற்றி பெற முடியும் என்று டத்தோ வீரா ஷாகுல் தாவூத் கூறினார்.

சிம்ஸ் இயக்கம் முதல் முறையாக இந்த நோன்பு திறப்பு நிகழ்வை நடத்தியது.

இந்நிகழ்ச்சி வெற்றி உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது நன்றி என்று அதன் தலைவர் டத்தோ என் இசட் கனி கூறினார்.

இந்த நிகழ்வில் முக்கிய அங்கமாக மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரியின் சட்டசபையும் சமூக நீதிக் குரல் என்ற நூலும் வெளியீடு கண்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset