நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

3 வாரங்களில் RM 1 பில்லியன்: SARA மூலம் 1.25 கோடி மக்கள் பயன் பெற்றனர்

கோலாலம்பூர்: 

'Sumbangan Asas Rahmah' (SARA) திட்டம் செயல்படுத்தப்பட்ட மூன்று வாரங்களில் 1.25 கோடி மலேசிய மக்கள் RM1 பில்லியனைத் தாண்டிய அளவில் பயனடைந்துள்ளனர்.

இந்த SARA முயற்சியானது நாட்டின் நிதி மறுசீரமைப்பின் மூலம் கிடைத்த சேமிப்பின் விளைவாகும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

“நிதி கசிவுகள் தடுக்கப்பட்டன, நிர்வாகம் சீரமைக்கப்பட்டது, சேமிக்கப்பட்ட வருவாய் மக்களுக்கே திருப்பி வழங்கப்பட்டது. நாட்டின் வருவாய் சமமாக பகிர்ந்தளிக்கப்படும் போது, அதன் பயன் நாடு முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு கிடைக்கிறது என்பதை இது நிரூபிக்கிறது,” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

இந்த ஆண்டிற்கான SARA திட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே RM97 மில்லியன் விற்பனை பதிவானது. இது கடந்த ஆண்டின் முதல் நாள் விற்பனையான RM50.7 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இரட்டிப்பானது குறிப்பிடத்தக்கது.

 மக்களின் கொள்முதல் அனுபவத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, திட்டத்தின் அமைப்பு சீராக இயங்குவதை நிதியமைச்சகம் உறுதி செய்துள்ளதாக நிதி அமைச்சர் II, டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.

“கடந்த ஆண்டு முதல் நாளில் நிமிடத்திற்கு 3,782 பரிவர்த்தனைகள் மட்டுமே நடைபெற்ற நிலையில், தற்போது எந்த தாமதமும் அல்லது இடையூறும் இன்றி நிமிடத்திற்கு 11,000-க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளைச் செயலாக்கும் திறன் அமைப்புக்கு உள்ளது,” என்று அவர் விளக்கினார்.

MyKad-ஐ திட்டத்தின் செயல்பாட்டு ஊடகமாக பயன்படுத்துவது மக்கள் உதவிகளை எளிதாகப் பெற உதவுவதுடன், உதவித் தொகை வழங்கலைத் திறம்படவும் ஒழுங்காகவும் மேற்கொள்ள உதவுகிறது.

சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset