செய்திகள் மலேசியா
ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்ட 2 குடிநுழைவுத் துறை அதிகாரிகள் ஆறு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்
அலோர் ஸ்டார்:
மலேசிய குடிநுழைவுத் துறையினர் என சந்தேகிக்கப்படும் இரண்டு அதிகாரிகள் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான வேலை அனுமதி வழங்குவதற்காக சுமார் 39,000 ரிங்கிட் ஊழல் வாங்கியதாக கூறி ஆறு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
30, 50 வயதுக்கிடையில் உள்ள இரு சந்தேக நபர்கள், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி அலோர் ஸ்டார் நீதிமன்றத்தில் ஆறு நாட்கள் தடுப்பு காவலில் வைக்க நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது.
சந்தேக நபர்கள் செவ்வாய்க்கிழமை மத்திய இரவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்தில் விசாரணைக்காக வந்தபோது கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், இந்த ஊழல் நடவடிக்கைகள் ஜனவரி முதல் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது.
இந்த விசாரணை மலேசிய ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 16(a)(A) கீழ் நடைபெற்று வருகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 4, 2026, 5:13 pm
உரிமம் இன்றி இயங்கிய மர தொழிற்சாலைகள் மீது வனத்துறையின் அதிரடி சோதனை
March 4, 2026, 4:50 pm
பகாங் அரசு ஊழியர்களுக்கு 1,000 ரிங்கிட் சிறப்பு உதவி: வான் ரோஸ்டி
March 4, 2026, 4:49 pm
மலேசியர்களின் நலன், பாதுகாப்பு அரசாங்கத்தின் முன்னுரிமையாகும்: ஃபஹ்மி
March 4, 2026, 4:16 pm
