செய்திகள் மலேசியா
வீடுகளில் ஈக்கள் நிரம்பியதால் கம்போங் உலு அயிர் மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது
தம்பின்:
கம்போங் உலு அயிர் குனிங் தெற்கு பகுதியில், வீடுகள் முழுவதும் ஈக்களால் நிரம்பி மக்கள் மன அழுத்தத்தில் உள்ளனர். குளம், சமையலறை, வாழைப்பரப்புகள், குழாய்கள் அனைத்திலும் ஈக்களால் நிரம்பியுள்ளன.
இந்த நிலை கடந்த வாரம் தீவிரமாகி, நோன்பு கடைப்பிடிக்கும் மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிக்கள் அருகிலுள்ள இரண்டு கோழிக் பண்ணைகள் காரணமாக உருவானதாக கூறப்படுகிறது.
37 வயது நோர் ஹதீலா ஹட்ஸிர், பண்டிகை கால வியாபாரத்தை நடத்தவிருந்தாலும், ஈக்கள் தினமும், வீடு முழுவதும் பறக்கின்றன. இதனால் மக்கள் வசதி பாதிக்கப்பட்டு, சுகாதார அபாயமும் அதிகரித்துள்ளது.
இதனிடையே, இங்குள்ள மக்கள் அதிகாரிகளிடம் புகார்களை வழங்கினாலும், இந்த நிலைமையில் மாற்றம் காணப்படவில்லை என்றும் நோர் ஹதீலா தெரிவித்தார்.
இதனால் மக்களுக்கு அமைதியான சூழலை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 4, 2026, 5:13 pm
உரிமம் இன்றி இயங்கிய மர தொழிற்சாலைகள் மீது வனத்துறையின் அதிரடி சோதனை
March 4, 2026, 4:50 pm
பகாங் அரசு ஊழியர்களுக்கு 1,000 ரிங்கிட் சிறப்பு உதவி: வான் ரோஸ்டி
March 4, 2026, 4:49 pm
மலேசியர்களின் நலன், பாதுகாப்பு அரசாங்கத்தின் முன்னுரிமையாகும்: ஃபஹ்மி
March 4, 2026, 4:16 pm
