நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடத்தப்பட்ட இளம் பெண் பயணப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டார்; பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் 280,000 ரிங்கிட் செலுத்தினார்: போலிஸ்

கோலாலம்பூர்:

நெகிரி செம்பிலானின் சிரம்பானில் கடத்தப்பட்ட இளம் பெண் கடத்தப்படுவதற்கு முன்பு பயணப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தார்.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜெய்ன் இதனை கூறினார்.

கடந்த  ஏப்ரல் 10ஆம் தேதி சிரம்பான் 2 அப்டவுன் அவென்யூவில் உள்ள ஒரு கடைக்கு தனியாக நடந்து செல்லும் போது 16 வயது  இளம் பெண் கடந்தப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது தாயாரும் அப்பகுதியில் உள்ள ஒரு சலூனுக்குச் சென்றிருந்தனர்.

பொருட்கள் வாங்க செல்லும் வழியில், பாதிக்கப்பட்டவர் இரண்டு நபர்களால் கடத்தப்பட்டார்.

பாதிக்கப்பட்டவரின் தாய் பின்னர் தனது தந்தையை (பாதிக்கப்பட்டவரின் தாத்தா) தொடர்பு கொண்டார். பின்னர் அவர்  போலிசில் புகார் அளித்தார்.

பாதிக்கப்பட்டவரின் தாயாருக்கு குற்றவாளிகளிடமிருந்து அழைப்பு வந்ததது. அப்போது அக்கும்பல்  2 மில்லியன் ரிங்கிட் மீட்கும் தொகையை கோரியது.

அச்சமடைந்த அத்தாயார் ஏப்ரல் 11 ஆம் தேதி 280,000  ரிங்கிட்டையும் பல தங்கப் பொருட்களை ஒப்படைத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில்  20 முதல் 31 வயதுடைய மூன்று ஆண்கள், மூன்று பெண்கள் அடங்கிய ஆறு உள்ளூர் சந்தேக நபர்களை போலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் போலிசார் மீட்கும் பணமாக 180,000 ரிங்கிட்டை மீட்டதாக அவர் கூறினார்.

முன்னதாக அப்பெண்ணை கடத்திய 20 வயதுடைய ஆடவரை போலிசார் கிள்ளானில் சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset