செய்திகள் கலைகள்
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படத்தின் டிரெய்லர், இசைவெளியீட்டு விழா ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது
சென்னை:
நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.
சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. முன்னதாக டீசர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், ரெட்ரோ படத்தின் டிரெய்லர், இசை வெளியீட்டு விழா வருகிற 18-ந் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 11, 2025, 7:30 pm
அஜித் குமார் மோட்டார் சைக்கிள் கூட்டணி நிகழ்ச்சி: 200க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளோட்டிகள் பங்கெடுப்பு
November 11, 2025, 2:42 pm
தர்மேந்திரா நலமுடன் உள்ளார்: வதந்திகளைப் பரப்பும் ஊடகங்களுக்கு எதிராக வெகுண்டெழுந்த ஹேமமாலினி
November 8, 2025, 4:49 pm
நடிகை கவுரி கிஷனிடம் உடல் எடை தொடர்பான சர்ச்சை கேள்வி கேட்ட நிருபர்
November 6, 2025, 8:48 pm
'முட்டாள்' என்று சொன்னதால் போட்டியை விட்டு விலகிய அழகுராணிகள்
November 3, 2025, 5:30 pm
Banduan திரைப்படத்தின் முதல் காட்சியை காண மலேசியா வந்துள்ளார் நடிகர் கார்த்தி
November 2, 2025, 5:34 pm
பரசுராம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சூர்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை
October 30, 2025, 7:32 am
மருத்துவத்திற்கு நிதி உதவி செய்ய முன் வந்த நடிகர் மம்முட்டி: பாராட்டும் இணையவாசிகள்
October 29, 2025, 5:45 pm
ஒரு அண்ணனாக, அதற்கு நான் ரவி தேஜாவுக்கு நன்றி சொல்கிறேன்: நடிகர் சூர்யா
October 27, 2025, 12:58 pm
பலூசிஸ்தானை ஆதரித்து பேசினாரா சல்மான் கான்?: தீவிரவாதிகள் பட்டியலில் சல்மானை சேர்த்த பாகிஸ்தான்
October 24, 2025, 12:03 pm
