செய்திகள் உலகம்
சிங்கப்பூர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. வரும் 23ஆம் தேதி (புதன்கிழமை) வேட்பு மனுத் தாக்கல் தினம் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
அதிபர் தர்மன் சண்முகரத்னம் நாடாளுமன்றத்தைக் கலைத்ததைத் தொடர்ந்து சிங்கப்பூரின் 14ஆவது பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.
பிரதமர் லாரன்ஸ் வோங்கின்கீழ் நடைபெறவிருக்கும் முதல் தேர்தல் இது.
சென்ற ஆண்டு மே மாதம் திரு வோங், பிரதமர் பொறுப்பை ஏற்றார்.
சிங்கப்பூரின் அரசமைப்புச் சட்டப்படி, அமைச்சர்கள், நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு பதவி துறக்கவேண்டியதில்லை.
அடுத்த நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் வரை அவர்கள் பொறுப்புகளைத் தொடர்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 10:21 am
துருக்கியில் 14 வயது பள்ளி மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 போ் உயிரிழந்தனா்
April 16, 2026, 10:08 am
அமெரிக்காவின் பிடிவாதத்தால் தோல்வியுற்ற பேச்சுவார்த்தை: உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டும் ஈரான்
April 16, 2026, 10:04 am
ஹோர்முஸ் ஜலசந்தியில் 20,000 மாலுமிகள், 2,000 கப்பல்கள் சிக்கியுள்ளன
April 15, 2026, 10:53 am
லெபனான் எல்லையில் மீண்டும் அமைதி திரும்புமா?: அதிபர் ஜோசப் அவ்ன் முன்வைக்கும் தீர்வு
April 15, 2026, 10:20 am
32 வயது வாலிபருக்கு நேர்ந்த வினோதச் சம்பவம்: 20 வருடங்களாக வயிற்றுக்குள் இருந்த வெப்பமானி
April 15, 2026, 9:51 am
ஈரானுடனான போர் முடிவுக்கு வந்ததாக டிரம்ப் அறிவிப்பு
April 14, 2026, 5:06 pm
