செய்திகள் உலகம்
ஈரானியக் கடற்பரப்பு முழுவதையும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டோம் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்: அது உண்மையில்லை என்று ஈரான் பதிலடி
வாஷிங்டன்:
ஈரானியக் கடற்பரப்பு முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அது உண்மையில்லை என்று ஈரான் பதிலடி தந்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
அணு ஆயுத சோதனையை கைவிடவும், ஹோர்முஸ் நீரிணையில் விதித்துள்ள கட்டுப்பாடுகளை விலக்கவும் கோரி அமைதிப் பேச்சுக்கு அமெரிக்கா முன்வந்தது. ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக டிரம்ப் ஏப். 8 ஆம் தேதி அறிவித்தார்.
இந்தப் போரை முழுமையாக நிறுத்த அமெரிக்கா-ஈரான் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வரும் நிலையில் ஏப்.10 ஆம் தேதி, ஈரான் மற்றும் அமெரிக்க குழுக்களை பாகிஸ்தான் வருமாறு அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து, சனிக்கிழமை (ஏப்.11) பேச்சுவார்த்தை தாமதமாகத் தொடங்கியது.
சுமார் 21 மணிநேரம் தொடர்ந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதனால், மீண்டும் போர் மூளும் சூழல் உருவானது. அதனைத் தொடர்ந்து ஈரான் எல்லையில் அமைந்துள்ள ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடப்போவதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஈரானியக் கடற்பரப்பு முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா முற்றுகையிடப்பட்டு அதன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிக்குள் ஈரானியக் கப்பல்கள் நுழைந்தால் தாக்கி அழிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் எச்சரிக்கையால் மீண்டும் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் உருவாகியுள்ளது. ஆனால் ஈரான் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வழக்கம்போல் அமெரிக்க அதிபர் தமது பொய்களை மீண்டும் அரங்கேற்றி வருகிறார் என்று கூறியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 14, 2026, 5:06 pm
ஹோர்முஸ் ஜலசந்தியில் சீன, ஈரானியக் கப்பல்களின் மர்மப் பயணம்
April 13, 2026, 3:04 pm
வங்காளதேசத்தில் பரபரப்பு: மத விவகாரத்தில் ஆன்மிகத் தலைவர் அடித்துக் கொல்லப்பட்ட கொடூரம்
April 13, 2026, 10:40 am
உலகின் மிக உயரமான 'பாழ்' கட்டிடத்திற்கு விடிவுகாலம்
April 12, 2026, 6:08 pm
