நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகத்தின் மீது தமக்குப் எந்தவித பயமுமில்லை: போப் லியோ XIV

வாடிகன்:

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகத்தின் மீது தமக்குப் எந்தவித பயமுமில்லை என்று போப் லியோ XIV அழுத்தமாக தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்க நாடுகளுக்கு 10 நாள் பயணத்தை மேற்கொள்ளும் போப் லியா விமானப் பயணத்தின்போது செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.

போருக்கு எதிராகத் தொடர்ந்து குரல்கொடுக்கப் போவதாகப் போப் லியோ உறுதிபட கூறினார். நான் யாருக்கும் அஞ்சவேண்டியதில்லை.

உலகத்தில் பலர் துன்புறுகின்றனர்; அப்பாவி மக்கள் பலர் ஈவிரக்கமின்றி கொல்லப்படுகின்றனர்.

எவராவது ஒருவர் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கவேண்டும் என்றார் போப் லியோ.

தாம் ஏற்றுள்ள பணியை அரசியல் சார்ந்ததாகவோ, தம்மை அரசியல்வாதியாகவோ கருதவில்லை என்றும் அவர் கூறினார்.

நான் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை நேரடியாகத் தாக்கவில்லை என்றும் போப் லியோ வலியுறுத்தினார்.

அவருடைய கூற்றுகளுக்கு அதிபர் டிரம்ப், "போப் லியோ குற்றத்தை எதிர்ப்பதில்லை. வெளியுறவு கொள்கைகளைப் புரிந்து கொள்ளவில்லை," என்று குறைகூறினார். 

ஆதாரம்: வாஷிங்டன் போஸ்ட் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset