நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மறைந்த பாக் லாவுக்கு பிரதமர் இறுதி மரியாதை செலுத்தினார்

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தேசிய  பள்ளிவாசலில் மறைந்த துன் அப்துல்லா அகமது படாவிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக வருகை தந்தார்.

ஐந்தாவது பிரதமரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள பிரதான பிரார்த்தனை மண்டபத்திற்குச் செல்வதற்கு முன்பு, பிரதமர் பிற்பகல் 1 மணிக்கு தேசிய பள்ளிவாசல் மைதானத்திற்கு வந்தார்.

பின்னர் அவர் அரசாங்கத் தலைவர்களுடன் இறுதி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் பிரதமர்கள் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், டான் ஸ்ரீ முஹைதீன் யாசின் ஆகியோர் தங்கள் கட்சி உறுப்பினர்களுடன் முன்னதாக ஜனாஸா தொழுகைக்கு வந்திருந்தனர். 

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி, வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசன் ஆகியோரும் பிரதமருடன் இறுதி மரியாதை செலுத்தினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset