நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தளபதி திருவிழாவை முன்னிட்டு புக்கிட் ஜாலில் எல்ஆர்டி ரயில் சேவை அதிகாலை 1 மணி வரை நீட்டிக்கப்படும்: ரேப்பிட் கேஎல்

கோலாலம்பூர்:

தளபதி திருவிழாவை முன்னிட்டு  புக்கிட் ஜாலில் எல்ஆர்டி ரயில் சேவை அதிகாலை 1 மணி வரை நீட்டிக்கப்படும்.

ரேப்பிட் கேஎல் ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.

தளபதி விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இசை வெளியீட்டு விழாவுடன் இணைந்து தளபதி திருவிழா இசை விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விழா வரும் சனிக்கிழமை புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

கிட்டத்தட்ட 100,000 பார்வையாளர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் குழுமத்தின் தலைவர் டத்தோ அப்துல் மாலிக் இதற்கான ஏர்பாடுகளை செய்து வருகிறார்.

இதன் அடிப்படையில் புக்கிட் ஜாலில் எல்ஆர்டி நிலைய செயல்பாடுகள்  டிசம்பர் 27ஆம் தேதியன்று அதிகாலை 1 மணி வரை நீட்டிக்கப்படும்.

பயணிகளை அவர்களின் இறுதி இடங்களுக்கு அழைத்துச் செல்ல இணைப்பு நிலையங்களின் இயக்க நேரங்களும் நீட்டிக்கப்படும்.

மேலும் பயணத்தை எளிதாக்க பயணிகள் தங்கள் டச்  அண்ட் கோ அட்டைகளை பயன்படுத்த நினைவூட்டப்படுகிறார்கள் என ரேப்பிட் கேஎல் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset