செய்திகள் மலேசியா
மஇகா அனைத்து சமூகத்தினரையும் அரவணைக்கும் அரசியல் நிலைப்பாட்டை என்றென்றும் தொடரும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்:
மஇகா அனைத்து சமூகத்தினரையும் அரவணைக்கும் அரசியல் நிலைப்பாட்டை என்றென்றும் தொடரும்.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தியில் இதனை கூறினார்.
உலக மனிதர்கள் அனைவரிடத்திலும், அன்பையும், நல்லிணக்கத்தையும் போதிக்கப் பிறந்து வந்த இயேசுபிரானின் மகத்தான பிறப்பை, கிறிஸ்துமஸ் தினமாகக் கொண்டாடி மகிழும் மலேசியக் கிறிஸ்துவ சமயத்தினர் அனைவருக்கும் குறிப்பாக, இந்திய கிறிஸ்துவ சமூகத்திற்கு எனது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்மைக் கடந்து போகும் 2025ஆம் ஆண்டில் உலகின் பல நாடுகளில் இன, மத ரீதியான மோதல்களும், கொலைகளும் நடந்திருப்பதைக் காணும்போது இயேசுபிரானின் அன்பு சார்ந்த போதனைகள் இன்னும் நமக்குத் தேவை என்பதை நாம் உணர்கிறோம்.
மற்ற மதத்தினரின் போற்றுதலுக்கு உரிய அவரின் போதனைகளை நாமும் இயன்றவரை பின்பற்றி, பல இனம் கொண்ட நம் மலேசிய சமுதாயத்தில் ஒருவருக்கொருவர் மரியாதையும், அன்பும் செலுத்துவோம்.
மஇகாவைப் பொறுத்தவரையில் அரசியல் ரீதியாக நாம் அனைத்து இன, மத சகோதரர்களை காலம் காலமாக அரவணைத்து வந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இந்துக்களைக் கொண்ட நமது மஇகா கட்சியில் பல தருணங்களில் இந்தியக் கிறிஸ்துவ சமூகத்தினருக்கு அரசாங்கத்திலும் கட்சியிலும் வாய்ப்புகளை பாரபட்சமின்றி வழங்கியிருக்கிறோம்.
கடந்த காலங்களில் பல கிறிஸ்துவ அன்பர்கள், மஇகாவின் சார்பில் அரசாங்கப் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள்.
கட்சியின் உயர் பதவிகளுக்குத் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
மஇகாவின் தேசிய உதவித் தலைவராகத் தேர்தல் மூலம் பேராளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டத்தோ நெல்சன் ரங்கநாதன் செனட்டராகவும் மஇகாவைப் பிரதிநிதித்து மேலவையில் இடம் பெற்றிருந்தார்.
மஇகாவின் இத்தகைய, அனைத்து மத, இன சமூகத்தினரையும் அரவணைக்கும் அரசியல் நிலைப்பாடு என்றென்றும் தொடரும் என உறுதி கூறுகிறேன்.
கிறிஸ்துவ அன்பர்கள் தேவாலயங்களுக்கு சென்றும், மற்ற இன சகோதரர்களைத் தங்களின் இல்லங்களுக்கு அழைத்து திறந்த இல்ல பொது உபசரிப்புகள் நடத்தியும் கிறிஸ்துமஸ் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென மஇகாவின் சார்பிலும் எனது தனிப்பட்ட சார்பிலும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 24, 2025, 10:54 pm
மலேசியாவின் முக்கிய பலமான பன்முகத்தன்மையை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பிரதிபலிக்கிறது: டத்தோஸ்ரீ ரமணன்
December 24, 2025, 6:12 pm
கிறிஸ்து பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்: சிலாங்கூர் சுல்தான் கிறிஸ்துமஸ் தின வாழ்த்து
December 24, 2025, 6:00 pm
பேரரசருடன் ஐக்கிய அரபு அமீரக அதிபர் சந்திப்பு
December 24, 2025, 4:52 pm
தமிழரின் பெருமைமிகு மன்னர் இராஜ ராஜ சோழனின் விழா; ஜன. 25ஆம் தேதி தலைநகரில் நடைபெறும்: டத்தோ ராமன்
December 24, 2025, 4:47 pm
பகாங்கில் வெள்ளம் தணிகிறது: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது
December 24, 2025, 1:24 pm
சிங்கப்பூரில் மரணத் தண்டனையை எதிர்த்து போராடிய முன்னாள் வழக்கறிஞர் ரவி காலமானார்
December 24, 2025, 1:23 pm
