
செய்திகள் மலேசியா
சுங்கைப்பூலோ தொகுதி கெஅடிலான் தேர்தலில் டத்தோஶ்ரீ ரமணனின் அணி அமோக வெற்றி
சுங்கைப்பூலோ:
சுங்கைப்பூலோ தொகுதி கெஅடிலான் தேர்தலில் அதன் தலைவர் டத்தோஶ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் தலைமையிலான அணி அமோக வெற்றியை பதிவு செய்தது.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சரும் சுங்கை பூலோவின் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ ரமணன் தொகுதி தலைவராக போட்டியின்றி வெற்றி பெற்றார்.
தொகுதி துணைத் தலைவர் பதவிக்கு ஐந்து முனைப் போட்டி நிலவியது.
இந்தப் போட்டியில் டத்தோஶ்ரீ ரமணன் அணியின் வேட்பாளரும், சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் நிர்வாகியுமான இக்ராமி மஸ்லி 2,222 வாக்குகளைப் பெற்று மகத்தான வெற்றி பெற்றார்.
தொகுதி உதவித் தலைவர் பதவியை டத்தோஶ்ரீ ரமணன் அணி வேட்பாளர் ஜி. சுரேஸ் வென்றார். அவர் 2,462 வாக்குகளைப் பெற்று தொகுதி தலைமைப் பதவியில் அணியின் முழு ஆதிக்கத்தையும் தக்க வைத்துக் கொண்டார்.
மேலும் தொகுதி இளைஞர் பகுதியை டத்தோஶ்ரீ ரமணனின் அணி முழுமையாக ஆக்கிரமித்தது. இதில் பாரிக் ஜமான் தலைவராக வெற்றி பெற்றார்.
பெண்கள் பிரிவில், சரிமா லிசுட் 1,039 வாக்குகளைப் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நூராசிகின் மாரமை தோற்கடித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 5:16 pm
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவி குறித்த கேள்விக்குப் பிரதமர் அன்வார் மறுப்பு
May 9, 2025, 12:52 pm
ஐந்து மாத குழந்தை சித்ரவதை: குழந்தை பராமரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
May 9, 2025, 12:51 pm